Ambagarathur Association UAE

News

அம்பகரத்தூர் அசோசியேசன் பொதுக்கூட்டம்

Posted by Nizar on February 6, 2011 at 7:58 AM Comments comments (3)

அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய நான்காவது பொதுக்கூட்டம்

 

துபாய்: பிப்ரவரி 04: அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய நான்காவது பொதுக்கூட்டம் துபாயில் சத்வா கார்த்திகா உணவக வளாகத்தில் நடைபெற்றது.

 

 

கூட்டத்தில் தலைவர் முஹம்மது அன்சாரி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார், கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

 

 

1. அம்பகரதூரில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமண உதவி, முதியோர்களுக்கு முதியோர் உதவி, கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

 

2. அமீரகத்தில் வாழும் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர்கள் ஹஜ் மைதீன், மகபூப் அலி, இருவரும் இதுவரை வசூல் செய்யப்பட்ட சந்தா நிலவரத்தையும், கடந்த ஆண்டு பித்ரா விநியோகம் செய்த கணக்குகளையும் சமர்ப்பித்தனர்.

புதியதாக பொறுப்பாளர்கள் நியமனம்

 

துணை தலைவராக சர்புதீன் அவர்களையும், துணை செயலாளராக ஷாஹுல் அவர்களையும் புதிய கூடுதல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்தனர்.

 

கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அடுத்த கூட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Thanks : ambagarathur.blogspot.com

 

காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை

Posted by Nizar on November 15, 2010 at 5:44 AM Comments comments (0)

காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை திட்டத்துக்கான அறிவிப்பை ரயில்வே துறை உடனடியாக வெளியிட வேண்டும் என திருநள்ளாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா வலியுறுத்தியுள்ளார்.




இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியது:

நாகூரிலிருந்து காரைக்கால் வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு மத்தியில் இதில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலில் இருந்து புதுச்சேரி, சென்னைக்கு செல்லவேண்டுமெனில் நேரடி ரயில் பாதை இணைப்பு இல்லாததால், ஏற்கெனவே காரைக்கால் முதல் பேரளம் வரை இருந்து அகற்றப்பட்ட மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்.




இது சம்பந்தமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர் ஒத்துழைப்போடு மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி மூலம் மத்திய ரயில்வே அமைச்சகத்தை அணுகி காரைக்கால் - பேரளம் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 25 கோடிக்கான அனுமதி பெறப்பட்டது. இத் தகவலை மத்திய அமைச்சர் தெரிவித்து, வரும் 2011-ம் ஆண்டில் திட்டம் முடிக்கப்படும் என அறிவித்தார்.

எனவே, இந்தத் திட்டத்தை உடனே தொடங்க ஏதுவாக ரயில்வேத் துறை தனியாக ஒரு அரசாணை பிறப்பித்து திட்டத்தை 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றார் சிவா.


நன்றி: ambagarathur.blogspot.com


காரையில் மருத்துவக் காப்பீட்டு திட்டம்

Posted by Nizar on October 29, 2010 at 2:35 PM Comments comments (0)



காரைக்கால்:மருத்துவக் காப்பீட்டு திட்டம் காரைக்காலில் விரைவில் துவக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் புதுச்சேரியிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தொடர் முயற்சி எடுத்தோம்.விடா முயற்சியால் இன்று அதற்கான அரசாணையைப் பெற்றுள்ளோம். முதல் கட்டமாக இத்திட்டம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

 

இதற்கு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு, ரேஷன் அட்டை ஒன்றுக்கு அரசு ரூ.968 செலுத்த உள்ளது.இத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை மேல் சிகிச்சைக்காக பெற்றுக் கொள்ளலாம்.நோயாளிகள் அரசியல் சிபாரிசு இன்றி நேரடியாகவே சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் அல்லது அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெரிய மருத்துவமனைகள் ஏதேனும் ஒன்றில் சிகிச்சை பெறலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

 

 

வெளிநாடு சென்றுள்ள புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் வல்Œராஜ் புதுச்சேரி திரும்பியவுடன், இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தாகும். இத் திட்டம் காரைக்காலில் விரைவில் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தந்த மாநில கவர்னர், முதல்வர், மத்திய திட்டத் துறை அமைச்சர், அமைச்சர்கள், மாநில காங்., தலைவர், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் நாஜிம் கூறியுள்ளார்