|
|
comments (0)
|
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி மலை இப்தார் விருந்தும் மற்றும் அதனுடன் நமது கூட்டமைப்பின் பொதுக்கூட்டமும் சத்துவாவில் உள்ள கார்த்திகா உணவகத்தில் நிகழவிருக்கிறது என்று தெரிவித்து கொள்ளுகிறோம். அம்பாகரதூர் நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது. பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழவிருக்கும் இடத்தின் விபரம் அனைத்து உறுப்பினர்களுக்கும் பின்னர் தெரிவிக்கப்படும்.
|
|
comments (0)
|
அம்பகரத்தூரில் ஃபித்ரா வினியோகம்

இந்த ஆண்டு (30.08.2011) அம்பகரத்தூர் அஸோசியேஷன் யுஎஇ சார்பாக சுமார் 100 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது.
மேலும் விபரங்களுக்கு புகை படத்தை காணவும் http://ambagarathur.webs.com/apps/photos/album?albumid=12328080
|
|
comments (0)
|
ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி
துபாய் ஆகஸ்ட் 12 : அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி துபாயில் சத்வா கார்த்திகா உணவகத்தில் நடைபெற்றது இதில் சங்கத்தின் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சங்கத்தின் தலைவர் அன்சாரி அவர்கள் இந்த வருட ரமலான் மாதத்தின் பித்ரா வசூலிப்பது மற்றும் அதனை விநியோகிக்கும் முறை பற்றி விளக்கி தலைமை உரை ஆற்றினார்.
உறுப்பினர்கள் அனைவர்களும் அவர்களுடைய பித்ராவையும் அவர்கள் நண்பர்கள் தரும் பித்ராவையும் அவர்களுடைய பகுதி பொறுப்பு தாரர்களிடம் கொடுக்குமாறு சங்கத்தின் தலைவர் அன்சாரி அவர்கள் தெரிவித்தார்கள் Thanks : ambagarathur.blogspot.com
|
|
comments (1)
|
துபாய்: ஜூலை, 15: அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய ஐந்தாவது பொதுக்கூட்டம் துபாயில் சத்வா கார்த்திகா உணவக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் முஹம்மது அன்சாரி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார், கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. அம்பகரதூரில் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் விதத்தில் குடிநீர் வசதி (குளிர்சாதன பெட்டி) செய்து தரப்படும்.
2 . வரும் ரமலான் மாதத்தில், அம்பகரத்தூர் மதரசாவில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுபொருட்கள் வழங்கப்படும்.
3. நமதூரில் முதியவர் ஒருவருக்கு ரூபாய் 2500.௦௦/- மருத்துவ செலவிற்காக கொடுக்கப்பட்டுள்ளது .
4 . கந்தன்குடியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், அம்பகரதூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமண செலவிற்காக தலா ரூபாய் 3000.00/- மற்றும் 2000.00/- வழங்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் வரவு செலவுகளை சங்கத்தின் பொருளாளர் மகபூப் அலி தெரிவித்தார்.

அடுத்த கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் ஆகஸ்ட்டு மாதம் 12 ஆம் தேதி நடை பெரும் என்று சங்கத்தில் தலைவர் தெரிவித்தார்
கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் P .M . ரபீக், துணை செயலாளர் A .J . ஷாகுல் மற்றும் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்,

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக நமதூர் கமாலியா தெருவை சேர்ந்த ஹாஜி அப்துல் மஜீத் அவர்களின் மகனார் முஹம்மது நவ்சாத் மற்றும் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த டாக்டர் அலாவுதீன் அவர்களின் மகனார் முஹம்மது சமீம் ஆஹிய இருவரும் லண்டனில் இருந்து வருகை புரிந்திருந்தனர், அவர்களை சங்கத்தின் சார்பாக கவுரவிக்கப்பட்டது.
அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறுவதால் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
|
|
comments (0)
|
அம்பகரத்தூரில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப் பட்டு வந்த ஏ டி எம் (ATM)18.02.2011 அன்று திறக்கப் பட்டது.

இந்த சேவையை லக்ஷ்மி விலாஸ் பேங்க் வழங்கி உள்ளது. இந்த ஏ டி எம் சேவை மூலம் சுற்றுபுற கிராம மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள்.
|
|
comments (3)
|
அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய நான்காவது பொதுக்கூட்டம்
துபாய்: பிப்ரவரி 04: அம்பகரத்தூர் அசோசியேசன் நடத்திய நான்காவது பொதுக்கூட்டம் துபாயில் சத்வா கார்த்திகா உணவக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் முஹம்மது அன்சாரி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார், கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. அம்பகரதூரில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமண உதவி, முதியோர்களுக்கு முதியோர் உதவி, கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
2. அமீரகத்தில் வாழும் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர்கள் ஹஜ் மைதீன், மகபூப் அலி, இருவரும் இதுவரை வசூல் செய்யப்பட்ட சந்தா நிலவரத்தையும், கடந்த ஆண்டு பித்ரா விநியோகம் செய்த கணக்குகளையும் சமர்ப்பித்தனர்.
புதியதாக பொறுப்பாளர்கள் நியமனம்
துணை தலைவராக சர்புதீன் அவர்களையும், துணை செயலாளராக ஷாஹுல் அவர்களையும் புதிய கூடுதல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்தனர்.
கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடுத்த கூட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Thanks : ambagarathur.blogspot.com
|
|
comments (0)
|
காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை திட்டத்துக்கான அறிவிப்பை ரயில்வே துறை உடனடியாக வெளியிட வேண்டும் என திருநள்ளாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியது:
நாகூரிலிருந்து காரைக்கால் வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு மத்தியில் இதில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலில் இருந்து புதுச்சேரி, சென்னைக்கு செல்லவேண்டுமெனில் நேரடி ரயில் பாதை இணைப்பு இல்லாததால், ஏற்கெனவே காரைக்கால் முதல் பேரளம் வரை இருந்து அகற்றப்பட்ட மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்.

இது சம்பந்தமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர் ஒத்துழைப்போடு மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி மூலம் மத்திய ரயில்வே அமைச்சகத்தை அணுகி காரைக்கால் - பேரளம் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 25 கோடிக்கான அனுமதி பெறப்பட்டது. இத் தகவலை மத்திய அமைச்சர் தெரிவித்து, வரும் 2011-ம் ஆண்டில் திட்டம் முடிக்கப்படும் என அறிவித்தார்.
எனவே, இந்தத் திட்டத்தை உடனே தொடங்க ஏதுவாக ரயில்வேத் துறை தனியாக ஒரு அரசாணை பிறப்பித்து திட்டத்தை 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றார் சிவா.
நன்றி: ambagarathur.blogspot.com
|
|
comments (0)
|



|
|
comments (0)
|

காரைக்கால்:மருத்துவக் காப்பீட்டு திட்டம் காரைக்காலில் விரைவில் துவக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் புதுச்சேரியிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தொடர் முயற்சி எடுத்தோம்.விடா முயற்சியால் இன்று அதற்கான அரசாணையைப் பெற்றுள்ளோம். முதல் கட்டமாக இத்திட்டம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு, ரேஷன் அட்டை ஒன்றுக்கு அரசு ரூ.968 செலுத்த உள்ளது.இத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை மேல் சிகிச்சைக்காக பெற்றுக் கொள்ளலாம்.நோயாளிகள் அரசியல் சிபாரிசு இன்றி நேரடியாகவே சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் அல்லது அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெரிய மருத்துவமனைகள் ஏதேனும் ஒன்றில் சிகிச்சை பெறலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
வெளிநாடு சென்றுள்ள புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் வல்Œராஜ் புதுச்சேரி திரும்பியவுடன், இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தாகும். இத் திட்டம் காரைக்காலில் விரைவில் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தந்த மாநில கவர்னர், முதல்வர், மத்திய திட்டத் துறை அமைச்சர், அமைச்சர்கள், மாநில காங்., தலைவர், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் நாஜிம் கூறியுள்ளார்
|
|
comments (0)
|

அமீரகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய வசதி அறிமுகம். இனி மாணவர்கள் தங்கள் செல்போனிலேயே பாடங்களை படித்துக்கொள்ளலாம், M-Education என்ற இந்த சேவை விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.
அமீரகத்தின் அரசு செல்போன் நிறுவனமான எதிசலாத், கல்வி கற்கும் முறையில் நவீன நுட்பங்கள் மூலம் புதுமைகளைப் புகுத்திவரும் பிளாக் போர்டு (Blackboard Inc) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த M-Education சேவையை வழங்கப்போகிறது, அபுதாபி பல்கலைகழகத்தில் வரும் ஜனவரி 2011ஆம் ஆண்டில் இருந்து இது சோதனை முறையில் நடைமுறைக்கு வருகின்றது.
இந்த Blackboard Mobile Learn solution மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடங்களையும், பாடம் சம்பந்தப்பட்ட பிற தகவல்களையும் நினைத்த நேரத்தில் தங்களின் செல்போன் மூலம் பெறலாம்.
அமீரகத்தில் 99 சதவிகிதத்தை அடைந்துள்ள எதிசலாத் நிறுவனத்தின் 3.5G மொபைல் அலைவரிசை மூலம் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் Android phone, BlackBerry, iPhone மற்றும் iPad. போன்ற அனைத்து மொபைல் சாதனங்கள் மூலமும் எளிதில் பயன்படுத்தத்தக்கது.
இதற்கான ஒப்பந்தம் எதிசலாத், பிளாக் போர்ட் மற்றும் அபுதாபி பல்கலைக் கழக அதிகாரிகளிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது குறித்து எதிசலாத் உயரதிகாரி அப்துல்லா ஹஷிம் தெரிவிக்கையில் இந்த திட்டம் எதிசலாதிற்கு மட்டுமல்ல அமீரக கல்வி சமுதாயத்திற்கே ஒரு மிகமுக்கிய நிகழ்வு. இதன் மூலம் அமீரகத்தின் கல்வி முறை அதன் அடுத்த கட்டத்திற்கு புதிய பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறினார்.