|
|
வெளியேற்ற சான்றிதழ் பெற இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் சவூதி அரேபிய இந்திய தூதரகம் எச்சரிக்கை
வெளிநாட்டு செய்தி Add comments.
Aug 192013
.
ரியாத், ஜூலை 19- “சவுதியிலிருந்து வெளி யேறுவதற்கான ஆவணங் களை பெறுவதற்காக, இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்” என அங் குள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
சவுதி அரே பியாவில் கடந்த மார்ச் மாதம், “நிதாகத்” என்ற புதிய சட்டம் அமல்படுத்தப் பட்டது.இதன்படி சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங் களும், தங்கள் நிறுவனங் களில் வெளி நாடுகளைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்தால், அங்கு கண்டிப்பாக உள்நாட் டைச் சேர்ந்த ஒருவரையும் வேலையில் சேர்க்க வேண்டும்.
புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும். இதனால், சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர், வேலை இழக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்கள் விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த அவகாசம் நவ., 4ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
புதிய தொழில் சட்டப்படி முறையான, “ஒர்க் பெர்மிட்” மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல் லாமல் சட்ட விரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் முயற்சி களை அந்நாட்டு அரசு மேற் கொண்டுள்ளது. இவர் களுக்கு சிறைத் தண்டனை விதிக் கப்படுவதுடன், கடுமை யான அபராதம் விதிக்கவும் திட்ட மிடப்பட்டு உள்ளது.
சவுதி அரேபியாவில், 20 லட்சம் இந்தியர்கள் பணியாற்று கின்றனர். சவுதி அரசின் புதிய சட்டத்தால் இவர்களில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. புதிய தொழில் சட்ட அறிவிப்பால் முறையான ஆவணங்கள் இல்லாத, 2 லட்சம் பேர் ஏற்கனவே சவுதியை விட்டு வெளியேறி விட்டனர். இன்னும் பலர் வெளியேற்ற சான்றிதழ் வேண்டி, தூதரகத்தை அணுகி யுள்ளனர். இந்த சான்றிதழை பெற்று தருவதாக கூறி, இடைத்தரகர் கும்பல் செயல் படுவதாக கூறப்படுகிறது.
எனவே, “இது போன்றவர் களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். வெளியேற்ற சான்றிதழ் இலவசமாக வழங் கப்படுகிறது” என சவுதியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.