Ambagarathur Association UAE

News

Illegal Imigrant in Australia

Posted by Nizar on July 21, 2013 at 5:00 AM

சிட்னி, ஜூலை 20 (டி.என்.எஸ்;) இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது அவர்கள் குடியேற தனி பகுதி ஒதுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் கெவின் ருத் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்குள் கடல்மார்க்கமாக மக்கள் குடியேறுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்தோனேசியப் பகுதிகளில் இருந்து ஆபத்தான இந்தப் பயணங்களை மேற்கொள்ளும் பலரும் கடலில் படகு கவிழ்வது போன்ற பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில் இவ்விரு நாடுகளும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. ஈரானிலிருந்து இந்தோனேசியாவிற்கு வரும் பயணிகளுக்கு தற்போது விசா அனுமதி தேவையில்லை. எனவே, இந்தோனேசியாவிற்குள் எளிதாக வரும் ஈரான் மக்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு இதுபோன்ற படகுப் பயணத்தின் மூலம் நுழைந்து விடுகின்றார்கள்.

எனவே, விசா அனுமதியை ஈரானிய பயணிகளுக்கும் முறைப்படுத்தப் போவதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஒரு ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஆண்டுதோறும் இது புதுப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குள் அகதிகளாக குடியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுபோல் அனுமதியின்றி நுழைபவர்கள் இனி திருப்பி அனுப்பப்படுவார்கள், அல்லது பப்புவா நியூகினியா பகுதிகளில் மட்டுமே குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று நேற்று ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருத் அறிவித்துள்ளார். (டி.என்.எஸ்;)

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments