Ambagarathur Association UAE

News

AMH. Nazim

Posted by Nizar on July 21, 2013 at 5:25 AM

காரைக்கால்: முதல்வருடன் திமுக எம்.எல்.ஏ-க்கள் நெருக்கமாக உள்ளனர் என எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் பேச்சுகு நெருக்கமாக இருப்பது மக்கள் நலத்திட்ட உதவிகள் பெறதான் என முன்னாள் எதிர்கட்சி தலைவர் நாஜிம் பதிலடி கொடுத்துள்ளார்.

காரைக்காலில் ஞாயிறன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் பேசும்போது, புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமியுடன், புதுச்சேரியில் நந்தா சரவணனும், காரைக்காலில் நாஜிமும் மிகவும் நெருக்கமாக உள்ளனர். இருவரும் திமுக எம்.எல்.ஏ-கள். இன்னும் பலர் என்.ஆர் காங்கிரசுடன் ஐக்கியமாகிவிட்டனர்.

முதல்வர் ரங்கசாமி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அவருக்கு எதிராக மாநிலமெங்கும் எதிர்ப்பு அலை வீசுகிறது. இதை காங்கிரஸ் கட்சிதான் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இல்லையேல் நெருக்கமாக இருப்பவர்கள் சாதித்துகொள்வார்கள் என்றார்.

இது குறித்து, இன்று பகல் முன்னாள் எதிர்கட்சி தலைவர் நாஜிம் எம்.எல்.ஏ கூறியதாவது:

"ரங்கசாமி புதுச்சேரி முதல்வர். நான் காரைக்கால் தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சி என்.ஆர் காங்கிரசுடன் கூட்டணியில் இல்லை. திமுக-வும் கூட்டணி இல்லை. என்.ஆர் காங்கிரஸ் தனிக்காட்டு ராஜாவாக உள்ளது. அதேபோல், என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு திமுக எதிரி கட்சி இல்லை. எதிர்கட்சி நல்லது செய்தால் பாராட்டவும், கெட்டது செய்தால் சுட்டிக்காட்டவும் எதிர்கட்சி வரிசையில் நடுநிலை தவறாமல் உள்ளோம். முதல்வருடன் நெருக்கமாக இருந்தால் தொகுதி மக்களுக்கு நல்லது செய்யமுடியும்.

 

ஒதுங்கி இருந்தால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் ஐந்தாண்டுகள் தனித்துதான் நிற்கமுடியும். மக்கள் நலத்திட்டங்களை உரிமையோடு கேட்டு பெறவே முதல்வருடன் நெருக்கமாக உள்ளோம். இது ஒன்றும் தவறல்ல. எதிர்கட்சி தலைவர், காங்கிரஸாரை என்.ஆர் காங்கிரசுக்கு எதிராக தீவிரப்படுத்தவே பேசியதாக கருதுகிறேன். அதனால், அவர் பேசியதும் தவறல்ல" என்றார்.

 

 

Categories: துபை செய்திகள்

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments