Ambagarathur Association UAE

News

United Arab Emirates is Small India Says Modi

Posted by Nizar on August 16, 2015 at 11:30 PM

அபுதாபி சென்றடைந்தார் மோடி: அமீரகம் குட்டி இந்தியா என புகழாரம் 

அபுதாபி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் சென்றார்.பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் சென்றார். அவர் தனது பயணத்தின் துவக்கமாக அபுதாபியை அடைந்துள்ளார். இந்நிலையில் ஷார்ஜாவைச் சேர்ந்த கலீஜ் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.அப்போது அவர் கூறுகையில்,அமீரகத்தில் 26 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் அமீரகத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் 34 ஆண்டுகள் கழித்து வருவது வினோதமானது.இந்தியாவும், அமீரகமும் ஒன்றுக்கு ஒன்று முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் ஆகும். இப்படி தான் நான் அமீரகத்தை பார்க்கிறேன்.அமீரகம் என் இதயத்திற்கு நெருக்கமான குட்டி இந்தியா ஆகும். இந்தியாவின் பொருளாதாரம், சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அமீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.அபுதாபியில் தலைவர்கள், தொழில் அதிபர்களை மோடி சந்தித்து பேச உள்ளார். அப்போது அவர்களை இந்தியாவில் அதிக முதலீடு செய்யுமாறு வலியுறுத்த உள்ளார். இன்று மாலை அவர் அபுதாபியில் உள்ள ஷேக் ஜயீத் மசூதிக்கு செல்கிறார்.எரிசக்தி மற்றும் பாதுகாப்பில் இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்த மோடி திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments